பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதாக குடும்பத்தினர் தகவல்!

0 2242

பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மேலும் சில நாட்களுக்கு அவருக்கு பூரண ஓய்வு தேவைப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய மொழிகள் பலவற்றில் பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் பாம்பே ஜெயஸ்ரீ. லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற பாம்பே ஜெயஸ்ரீக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் மேலும் ஓரிரு நாட்களுக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் குடும்பத்தினர் சார்பில் டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு பிரைவெசியோடு ரசிகர்களின் ஒத்துழைப்பும் தேவை என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments