பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு!

0 1609

பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் 200 ரூபாய் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வரை இந்த மானியம் பொருந்தும். பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அகவிலைப்படி உயர்வால், 47லட்சத்து 58 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், 69 லட்சத்து 76 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.

இதே போன்று சணலுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு 5 ஆயிரத்து 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments