ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீ.. 3,000 ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்

0 1283

ஸ்பெயினின் வாலென்சியா பிராந்தியத்தில் கட்டுக்கடங்காமல் பற்றிஎரியும் காட்டுத் தீயால் 3,000 ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளன.

அரேகன் மற்றும் வலென்சியா பகுதிகளுக்கு இடையே உள்ள பரந்து விரிந்த வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 18 சிறிய ரக விமானங்கள், ஹெலிகாப்டர்களுடன் ஸ்பெயின் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகி ன்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments