சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்
சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.
கிழக்கு சிரியாவின் ஹசாக்கா பகுதியில் அமெரிக்க ராணுவப் படை தளம் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ தளத்தில் பணியாற்றிவந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 5 ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.
இதற்கு பதிலடியாக அதிபர் ஜோ பைடன் உத்தரவின் படி ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக சிரியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.
Comments