இவ்வளவு வேகமாக ராகுலின் எம்.பி பதவி பறிபோக காரணம் யார் தெரியுமா.? அவரே தான் இவர்... இவரே தான் அவர்..!

0 19395

தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களின் பதவியை, மேல்முறையீட்டுக்கான காலம் வரை பறிக்காமல் இருக்க, மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்று ராகுல்காந்தி வரவிடாமல் தடுத்த நிலையில், இன்று அவர் பதவி பறிபோக அதுவே காரணமாகி இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது. 

மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ராகுல் தரப்பு நடவடிக்கை மேற்கொண்ட வந்தது.

2 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள் பதவியில் நீடிக்க இயலாது என்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ன் விதிகளை பயன்படுத்தி ராகுல் வகித்து வந்த வயநாடு தொகுதி எம்.பி பதவியை மக்களவை செயலகம் பறித்துள்ளது. மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டு ராகுலின் எம்.பி பதவியை உடனடியாக பறித்ததாக கூறி காங்கிரசார் கண்டனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் ராகுலின் பதவி உடனடியாக பறிபோக அவர்தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 1951ல் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டுவர அவசர சட்டம் பிறப்பிக்கத் திட்டமிட்டனர்.

அதன்படி நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற எம்.பி.மற்றும் எம்.எல்.ஏக்கள் தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து 3 மாத காலங்களுக்குள் மேல்முறையீடு செய்தால், அந்த தண்டனையை ரத்து செய்யும் வரையிலோ அல்லது தண்டனையை உறுதிசெய்யும் வரையிலோ சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் பதவியில் தொடர்வார்கள் என்று அவசரச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

இதனை கடுமையாக எதிர்த்த அப்போதைய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, அவசரச் சட்டம் 'கிழித்து வீசியெறிய வேண்டிய ஒன்று' எனப் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். ராகுலின் எதிர்ப்பு காரணமாக அவசர சட்டம் கொண்டு வரப்படுவது கைவிடப்பட்டது. அதனை சட்டமாக நிறைவேற்றியிருந்தால் இப்போது ராகுல்காந்தியின் எம்.பி பதவியை இவ்வளவு வேகமாக மக்களவை செயலகம் பறித்திருக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments