"2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.." - பிரதமர் மோடி..!
2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருந்து காசநோயை முற்றிலுமாக ஒழிக்க, மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஒரே உலகம் காசநோய் மாநாட்டில், காசநோயற்ற பஞ்சாயத்துகளை உருவாக்கும் முன்னெடுப்பு பணிகளை, பிரதமர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், 2050ஆம் ஆண்டிற்குள் காசநோயை ஒழிக்க உலக நாடுகள் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே அந்த இலக்கை இந்தியா அடைய வேண்டும் என்றும், அதற்கு பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
காசநோய்க்கான 80 சதவீத மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இது இந்திய மருந்துத்துறையின் திறமையை, உலக நாடுகளுக்கு வெளிப்படுத்துவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
Comments