நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்த புதிய கிரகம்..!
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கிரகத்தில் 'மணல்' மேகங்கள் உள்ளன என்றும் அதன் வட்டப்பாதையில் உள்ள இரண்டு நட்சத்திரங்களையும் சுற்றி வருகின்றது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த மேகங்களை கண்டுபிடித்ததாக நாசா தெரிவித்துள்ளது.
இக்குழு, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, பிரபஞ்சத்தின் அனைத்து மூலை முடுக்குகளில் இருந்தும் படங்களை எடுத்து வந்தது.
இந்த கிரகத்தில் .'மணல் மேகங்கள்' தவிர, தண்ணீர், மீத்தேன் மற்றும் கார்பன் மோனாக்சைடு இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
Comments