ஜம்மு காஷ்மீரில் 700 மில்லியன் டாலர் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெறுகின்றன - தஸ்லீமா அக்தார்
ஜம்மு-காஷ்மீர் தற்போது வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருவதாக, ஐநா மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான தஸ்லீமா அக்தார் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு ஜம்மு காஷ்மீர் தயாராகி வருவதாகவும், புதிய நிர்வாகத்தின் கீழ் நகராட்சிகள் குழுக்கள் அமைக்கப்பட்டு 700 மில்லியன் டாலர் மதிப்புடைய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடைக்கோடி கிராமம் வரை மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவித்த தஸ்லீமா, தீவிரவாதம் 40 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டதாக தமது உரையில் தெரிவித்துள்ளார்.
Comments