இத்தாலியில் ஆழ்கடலில் சிக்கித் தவித்த 700 அகதிகள் பத்திரமாக மீட்பு..!
தெற்கு இத்தாலி கடற்பகுதியில் படகு பழுதாகி ஆழ்கடலில் சிக்கித் தவித்த 700-க்கும் மேற்பட்ட அகதிகளை இத்தாலி கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக கடல்வழி பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் சென்ற படகு துனிசிய கடற்கரை பகுதியருகே மூழ்கியதில், 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 33 பேர் மாயமாகினர்.
இதையடுத்து கலாப்ரியா கடற்பகுதியில் படகு ஒன்றில் இருந்த 295 அகதிகளும், சிசிலியன் தீவான சைராகுஸ் கிழக்கே மற்றொரு மீன்பிடி கப்பலில் இருந்த 450 அகதிகளும் இருவேறு நடவடிக்கைகளில் மீட்கப்பட்டனர்.
Comments