கார் விபத்து வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது செங்கல்பட்டு நீதிமன்றம்..!
காரை அதிவேகமாக செலுத்தி, விபத்தை ஏற்படுத்தி, தனது தோழி உயிரிழக்கக் காரணமாக இருந்த வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த்தை கைது செய்ய செங்கல்பட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த், சிகிச்சைப் பிறகு உடல்நிலை தேறி தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விபத்து தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த செவ்வாய்கிழமை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
யாஷிகா ஆனந்த் ஆஜராகாத நிலையில், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் ஏப்ரல் 25ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அன்றைய தினமும் ஆஜராகவில்லை என்றால் போலீசாரால் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
Comments