குழந்தைகள், குடியிருப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!
ஒவ்வொரு முறையும் மாஸ்கோவில் சமாதானம் என்ற வார்த்தையை கேட்க முயற்சிக்கும் போது, அடுத்து ஒரு குற்றவியல் தாக்குதலுக்கு உத்தரவு வழங்கப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார்.
சீன அதிபரின் ரஷ்ய வருகை குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் இதனை தெரிவித்துள்ளார். இப்போது, சாதாரண மக்கள் மற்றும் குழந்தைகள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது என்றும் ஜெலென்ஸ்கி ட்வீட் செய்துள்ளார்.
ரஷ்யாவை தோற்கடிக்கவும் உயிர்களைப் பாதுகாக்கவும் உலகிற்கு அதிக ஒற்றுமையும் உறுதியும் தேவை. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Comments