விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் ரூ.2,000 கோடியில் அமைகிறது பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா- ஒப்பந்தம் கையெழுத்து

0 2116

இந்தியாவின் முதல் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா, விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 1,052 ஏக்கரில், 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய பியூஷ் கோயல், உலங்கெங்கும் வாழும் இந்தியர்கள், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு காஞ்சிபுரம் பட்டு ஆடைகளை வாங்குவது நம் பெருமை என கூறினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர், 2030-31ஆம் ஆண்டிற்குள் தமிழகம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்ட மத்திய அரசு உதவிட வேண்டும் என்றும், சேலத்தில் அமைய உள்ள ஜவுளி பூங்காவிற்கும் மத்திய அரசு நிதி பங்களிப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். பி.எம். மித்ரா பூங்கா திறப்பு விழாவிற்கு பிரதமரையும், பியூஷ் கோயலையும் நிச்சயம் அழைப்போம் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments