ரஷ்யாவில் போருக்கு எதிராக கட்டிப்பிடித்து போராட்டம் நடத்திய இளைஞர் கைது
ரஷ்யாவில் போருக்கு எதிராக கட்டிப்பிடித்து போராட்டம் நடத்திய 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரஷ்யா-உக்ரைன் போர் ஓராண்டை கடந்தும் நடைபெற்று வரும் நிலையில், ரஷியாவின் இஷெவ்ஸ்க் (IZHEVSK) நகர தெருவில் நிகிடாகோர்புனோவ் என்ற இளைஞர், "நீங்கள் போருக்கு எதிராக இருந்தால் என்னைக் கட்டிப்பிடி" என்று எழுதப்பட்ட பலகையுடன் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவ்வழியாகச் சென்றவர்கள் அவரை கட்டிப்பிடித்து ஆதரவு தெரிவித்த நிலையில், போலீசார் நிகிடாவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
நிகிடாவுக்கு 30 ஆயிரம் ரூபிள் அபராதம் விதித்து பின்னர் அவரை விடுவித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments