ஆசிரியரை விரட்டி விரட்டி வெளுத்த மாணவனின் தந்தை தாய், தாத்தா அதிரடி கைது..! சிறுவனை தாக்கியதால் திருப்பி அடித்தனர்..!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே 2 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவனை அடித்த ஆசிரியரை பெற்றோர் விரட்டி விரட்டி தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது..
அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 2 ஆம் வகுப்பு படிக்கின்ற சிறுவனை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், பதிலுக்கு ஆசிரியர் ஒருவரை விரட்டி விரட்டி வெளுத்த காட்சிகள் தான் இவை..!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கீழநம்பிபுரத்தில் அரசு உதவி பெறும் இந்து தொடக்கப்பள்ளியில் தான் இந்த களேபரம் அரங்கேறி உள்ளது.
இந்த பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவனை , ஆசிரியர் பரத் என்பவர் அடித்து மாணவர்கள் மீது பிடித்து தள்ளிவிட்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த மாணவனின் பெற்றோர் , சக மாணவர்களிடம் விசாரித்துள்ளனர். தாக்கியது உண்மை என்று தெரிந்ததும் ஆத்திரம் அடைந்த மாணவனின் தாய் ஆசிரியரை ஒருமையில் திட்டினார்.
அருகில் நின்ற தலைமை ஆசிரியர் குருவம்மாள் வீடியோ எடுத்தபடியே பெற்றோரிடம் மரியாதையாக பேசும் படி தெரிவித்தார். சின்னபுள்ளைய அடிக்கிற உனக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கு ? என்று மடக்கிப்பிடித்து ஆசிரியரை தாக்கியதால் குருவம்மாள் அலறிக் கூச்சலிட்டார்.
தப்பி ஓடிய ஆசிரியர் பாரத்தை ஓட , ஓட விரட்டி பெற்றோர் செருப்பாலும் தாக்கினர்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது போல தங்கள் மகனை தாக்கியதாக ஆசிரியரை திருப்பி தாக்கியதால் தாய் தந்தை மற்றும் தாத்தா ஆகிய 3 பேரை வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
Comments