தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் விற்பனை.. காவல் நிலையத்திற்கு மாதா மாதம் மாமூல்..!
சென்னை, எம்.ஜிஆர் நகரில் உள்ள பீடா கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை விற்பனை செய்ய, காவல் நிலையத்திற்கு மாதா மாதம் பத்தாயிரம் ரூபாய் மாமூல் கொடுப்பதாக வியாபாரி பேசுவது செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடையில் தடை செய்யப்பட்ட மாவா பொட்டலங்களை கேட்கும் நபர் கடைக்காரரிடம் பேச்சு கொடுத்தபோது, ஆர்-10 காவல் நிலையத்திற்கு பத்தாயிரம் லஞ்சம் கொடுப்பதாகவும், ஆனால் அவர்கள் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும் கடைக்காரர் கூறும் காட்சிகள் அந்த செல்போன் வீடியோவில் பதிவாகியுள்ளது.
Comments