அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 2 நம்பிக்கை இல்லா தீர்மானங்களும் தோல்வி
பிரான்சு அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 2 நம்பிக்கை இல்லா தீர்மானங்களும் தோல்வி அடைந்தன.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்த மசோதா அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62-ல் இருந்து 64ஆக மாற்ற வழிவகை செய்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.
மத்தியவாத லியாட் கூட்டணி சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 278 பேர் வாக்களித்தனர்.
அதுபோல் 'ஃபார்ரைட் நேஷனல் ராலி சார்பில் கொண்டு வரப்பட்ட 2வது நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் தோல்வி அடைந்தது.
Comments