அம்ரித் பால் சிங் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!

0 1706

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கையை கண்டித்து இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், சிலர் தேசிய கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்தனர். 

இந்நிலையில், அம்ரித்பாலை விடுதலை செய்யக்கோரி சான் பிரான்சிஸ்கோ நகரிலுள்ள இந்திய தூதரகத்தின் கதவு, ஜன்னல் களை அடித்து நொறுக்கி காலிஸ்தான் ஆதரவாளர்கள் சூறையாடினர்.

இதையடுத்து,டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை அழைத்து  பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு வெளியுறவுத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments