12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த அண்ணா நகர் டவர் பூங்கா..!
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான அண்ணா நகர் டவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
1968ஆம் ஆண்டில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பூங்காவில், 133 அடி உயரத்தில் 12 அடுக்குகள் கொண்ட உயர் கோபுரம் அமைக்கப்பட்டது.
தற்கொலை போன்ற சம்பவங்களால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, கடந்த 2011ஆம் ஆண்டில் அந்த டவர் மூடப்பட்டது. இந்நிலையில், பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, 97 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட டவரை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
பல வண்ண விளக்குகள், கோபுரத்தின் மேல் தளத்தில் இரும்பு வேலி, சிசிடிவி கேமராக்கள் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன.
Comments