கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாஹோவில் கடும் பனிப்பொழிவு..!
கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாஹோவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களான கலிபோர்னியாவில் அசாதரணமான வானிலை நிலவும் நிலையில், தாஹோவில் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் சுமார் 8 அடி அளவுக்கு பனி படர்ந்துள்ளது.
சில பகுதிகளில் பனி உறைந்து பனிக்கட்டிகளாக மாறியுள்ளது. வழக்கமாக தாஹோவில் பிப்ரவரி மாதத்தோடு பனிப்பொழிவு நிறைவடையும் நிலையில், தற்போது மார்ச் மாதத்தில் பனிப்பொழிவை காண்பது மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கலிபோர்னியாவின் ஒரு பகுதி மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு பகுதியான தாஹோவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments