தமிழக அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் மொத்த வருவாய், மொத்த செலவீனம் எவ்வளவு..?
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மொத்த வருவாய் வரவாக 2 லட்சத்து 70 ஆயிரத்து 515 கோடி ரூபாயும், மொத்த வருவாய் செலவீனமாக 3 லட்சத்து 8 ஆயிரத்து 55 கோடி ரூபாயும் கணக்கிடப்பட்டுள்ளது.
அரசின் மொத்த வருவாய் ஒரு ரூபாயாக கணக்கிடப்பட்டால் அதில் எந்த வகைகளில் வருவாய் கிடைத்துள்ளது என்பது பைசாவாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மூலமாக 44 பைசாவும், பொதுக்கடன் மூலமாக 33 பைசாவும், மத்திய வரிகளின் பங்காக 10 பைசாவும், ஒன்றிய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் மூலமாக 7 பைசாவும், மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் மூலமாக 5 பைசாவும், கடன்கள் மூலமாக 1 பைசாவும் பெறப்படுகிறது.
மொத்த செலவை ஒரு ரூபாய்க்கு கணக்கிடப்பட்டதில், உதவித்தொகைகள் மற்றும் மானியத்திற்காக 30 பைசாவும், சம்பளத்திற்காக 19 பைசாவும், வாங்கப்பட்ட கடன்களுக்கான வட்டியாக 13 பைசாவும், கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக 11 பைசாவும், மூலதனச் செலவாக 11 பைசாவும், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியகால பலன்களுக்காக 9 பைசாவும், செயல்பாடுகள் மற்றும்
பராமரிப்புக்காக 4 பைசாவும், கடன் வழங்குவதற்காக 3 பைசாவும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments