தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்
தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடியாக குறைத்திருக்கிறோம்
பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பிற்கு, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது
மாநில அரசின் வரி வருவாய் 6.11%ஆக உயர்வு
மாநில அரசின் வரி வருவாய் 2020-21ல் 5.58% குறைந்தது; மாநில அரசின் வரி வருவாய் கடந்த 2 ஆண்டில் 6.11%ஆக உயர்ந்துள்ளது
மொழிப்போர் தியாகிகளுக்கு சென்னையில் நினைவிடம்
மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்
அம்பேத்கரின் படைப்புகளில் தமிழில் மொழிபெயர்ப்பு
அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள் ரூ.5 கோடியில் தமிழில் மொழிபெயர்க்கப்படும்
தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு
தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தி தமிழில் மென்பொருள் உருவாக்க நடவடிக்கை - நிதியமைச்சர்
591 தமிழறிஞர்களுக்கு இலவச பயணத் திட்டம்
தமிழறிஞர்கள் 591 பேர் இலவச பயணத் திட்டம் அமல்படுத்தப்படும்
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம்
சோழப் பேரரசு புகழை உலகறிய செய்ய தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும்
சோழப் பேரரசின் கலைப் பொருட்களை பாதுகாக்கும் வகையில் சோழர் அருங்காட்சியகம் அமைப்பு
தமிழக ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிதி
தமிழக ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தால், அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி ரூ.20 லட்சத்திலிருந்து, ரூ.40 லட்சமாக உயர்வு
இலங்கை தமிழர் குடியிருப்பு கட்ட ரூ.223 கோடி ஒதுக்கீடு
இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகள் கட்ட ரூ.223 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
711 தொழிற்சாலைகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் விரிவாக்கம்
711 தொழில் நிறுவனங்களில் 8.35 லட்சம் தொழிலாளர்கள் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவம் விரிவாக்கம்
குடிமைப்பணி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவித்தொகை
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு மாதம் ரூ.25,000, முதல்நிலை தேர்வு எழுதுவோருக்கு மாதம் ரூ.7,500 உதவித்தொகை
புதிய பள்ளி கட்டிடங்களுக்காக ரூ.7000 கோடி
ரூ.7,000 கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டம் மூலம் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்படும்
புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடி
அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு
சென்னையில் உலகளாவிய விளையாட்டு மையம்
சென்னையில் சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் அமைக்கப்படும்
அனைத்து சமூக பள்ளிகளும் ஒரேகுடையின் கீழ் கொண்டுவரப்படும்
ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூக பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும்
இந்து சமய அறநிலைத்துறை உட்பட பல்வேறு துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டுவரப்படும்
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40299 கோடி ஒதுக்கீடு
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40299 கோடி ஒதுக்கீடு
கலைஞர் நூலகம் ஜூன் மாதம் திறப்பு
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகம் ஜூன் மாதம் வாசகர்களை வரவேற்கும் - நிதியமைச்சர்
மதுரை கலைஞர் நூலகத்தில் 3.50 லட்சம் நூல்கள் தமிழ், ஆங்கிலத்தில் இடம்பெறும்
நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு
தொழில்சார் பயிற்சி தரும் 'நான் முதல்வன்' திட்டம் மூலம் 12.70 லட்சம் மாணவர்களுக்கு தற்போது பயிற்சி
தொழில் முன்னோடி திட்டம்: ரூ.1000 கோடி ஒதுக்கீடு
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் ரூ.1000 கோடி ஒதுக்கீடு
உயர்கல்வித்துறை - ரூ.6,967 கோடி ஒதுக்கீடு
உயர்கல்வித் துறைக்கு ரூ.6967 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
ரூ.25 கோடியில் நேரு விளையாட்டு அரங்கம் சீரமைப்பு
ரூ.25 கோடியில் நவீன வசதியுடன் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் சீரமைப்பு
ரூ.500 கோடியில் காலை உணவு திட்ட விரிவாக்கம்
முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு; 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்
அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்
எஸ்சி, எஸ்டி துறைக்கு ரூ.3513 கோடி ஒதுக்கீடு
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு இந்த நிதி ஆண்டில் ரூ.3,513 கோடி ஒதுக்கீடு
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1000லிருந்து ரூ.1500ஆக உயர்வு
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1500லிருந்து ரூ.2000ஆக அதிகரிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.1444 கோடி ஒதுக்கீடு
மாணவர்களுக்கு சைக்கிள் திட்டம் - ரூ.305 கோடி ஒதுக்கீடு
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.305 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
மாணவர்களுக்கு ரூ.1580 கோடியில் நலத்திட்டங்கள்
BC, MBC, DNC மற்றும் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க ரூ.1580 கோடி ஒதுக்கீடு
புதுமைப்பெண் திட்டத்தால் மாணவிகள் சேர்க்கை அதிகரிப்பு
புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை
ரூ.1000 உதவித்தொகை திட்டம் மூலம், உயர்கல்வி பயிலும் மாணவிகளின் சேர்க்கை, 29 சதவீதம் அதிகரித்துள்ளது
மகளிர் சுய உதவிக்குழு-ரூ.30,000 கோடி
கடந்தாண்டு மகளிர் உதவிக் குழுவுக்கு ரூ.24,212 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது; இந்தாண்டு ரூ.30ஆயிரம் கோடி கடன் வழங்க திட்டம்
கடன் தள்ளுபடிக்கு ரூ.3993 கோடி ஒதுக்கீடு
விவசாய கடன் தள்ளுபடி ரூ.2391 கோடி; நகைக் கடன் தள்ளுபடி ரூ.1000 கோடி; சுயதவி குழு கடன் தள்ளுபடி ரூ.600 கோடி என மொத்தம் 3993 கோடி ஒதுக்கீடு
ரூ.434 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரூ.434 கோடியில் வெள்ளத் தணிப்பு தடுப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது
தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ரூ.10 கோடி
தெரு நாய் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விலங்குகள் நல வாரியம் மூலம் 10 கோடி ஒதுக்கீட்டில் இன விருத்தி கட்டுப்பாட்டு மையம்
தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்
ஈரோடு கோபியில் புதிய வனவிலங்கு சரணாலயம்
அழிந்து வரும் உயிரினங்களை காக்க, தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும். இது 18ஆவது வனவிலங்கு சரணாலயமாகும்
ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபியில் 80,000 ஹெக்டேர் வனப்பரப்பில், தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும்
பறவை ஆராய்ச்சி-ரூ.25 கோடியில் புதிய மையம்
பறவை பாதுகாப்பு, பறவை குறித்த ஆராய்ச்சிக்காக மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம்
ரூ.2000 கோடியில் 5145 கி.மீ. கிராம சாலைகள்
முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், ரூ.2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5145 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்க திட்டம்
அம்ரூத் 3.0 திட்டத்திற்க்கு கூடுதலாக ரூ.612 கோடி
அம்ருத் 3.0 திட்டம் மூலம் குடிநீர் சீரமைப்பு , நீர்நிலை புதுப்பிப்பு, பசுமையான நகர்புறப் பகுதிகள் உருவாக்கம்
9ஆயிரத்து 378 கோடியில் ஏற்கனவே ஒப்புதல்; தற்போது ரூ.612 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர்
கோயம்புத்தூரில் ரூ.175 கோடியில் செம்மொழி பூங்கா
கோயம்புத்தூரில் ரூ.175 கோடி மதிப்பீட்டில், 2 கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைக்கப்படும்
முதற்கட்டமாக 45 ஏக்கரில் தாவரவியல் பூங்காவுடன் ரூ.172 கோடியில் கோவை செம்மொழி பூங்கா பணிகள் தொடங்கும்
ரூ.1500 கோடியில் அடையாறு, கூவம் சீரமைப்பு
ரூ.1500 கோடி மதிப்பீட்டில், 44 கி.மீ தூர அளவிற்கு அடையாறு, கூவம் ஆறுகள் சீரமைப்பு, பூங்காக்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும்
சென்னையில் ரூ.430 கோடியில் கழிவறை மேம்பாடு
சென்னை பெருநகரில் தனியார் பங்களிப்புடன் கழிவறைகள் கட்டவும், மேம்படுத்தவும் ரூ.430 கோடி ஒதுக்கீடு
பிற மாவட்டங்களுக்கும் கழிவறை மேம்பாட்டுத்திட்டம்
சென்னையில் மேம்படுத்தப்படும் கழிவறை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம், பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்
சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி தியேட்டர்
சென்னை தீவுத்திடலில், 30 ஏக்கர் பரப்பளவில், பொழுதுப்போக்கு சதுக்கம், மற்றும் திறந்தவெளி திரையரங்கம் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்
ரூ.1000 கோடியில் வடசென்னை வளர்ச்சித்திட்டம்
வட சென்னையில் வளர்ச்சி திட்டம் 1000 கோடியில் செயல்படுத்தப்படும்
தேனாம்பேட்டை-சைதை வரை 4 வழி மேம்பாலம்
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையில், ரூ.621 கோடியில் 4 வழித்தட மேம்பாலம் கட்டப்படும்
ரூ.1200 கோடியில் பேருந்து பணிமனை மேம்பாடு
சென்னையில் வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி பேருந்து பணிமனைகள் ரூ.1200 கோடியில் மேம்படுத்தப்படும்
ரூ.500 கோடியில் 1000 புதிய பேருந்துகள்
1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு; 500 பழைய பேருந்துகள் சீரமைக்கப்படும்
புதிய ரயில் திட்டம் - ரூ.8056 கோடி ஒதுக்கீடு
இரயில்வே போக்குவரத்து பங்களிப்பை உயர்த்த மத்திய அரசுடன் பேசி புதிய ரயில் திட்டம் செயல்படுத்த டிட்கோ மூலம் ரூ.8056 கோடியில் சிறப்பு நிறுவனம்
ரூ.17,500 கோடியில் கோவை, மதுரை மெட்ரோ
கோவை மாநகர மெட்ரோ 9 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும்; 8500 கோடியில் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம்
2030க்குள் 33ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி
மாநில மின் உற்பத்தி 2030க்குள் 33 ஆயிரம் மெகாவாட்டாக உயரும்; பசுமை ஆற்றல் மின் உற்பத்தி சக்தியை 50 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி அதிகரிப்பு
2030க்குள் 50 சதவீதத்திற்கு மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின் உற்பத்தி பங்களிப்பு இருக்க சிறப்பு நிறுவனம் உருவாக்கம்
மின்வாரிய இழப்பு குறைய வாய்ப்பு
மின்வாரிய இழப்பு 2021-22ல் ரூ.11951 கோடியில் இருந்து, நடப்பு ஆண்டில் ரூ.7822 கோடியாக குறைய வாய்ப்பு
சேலம் 880 கோடியில் 119 ஏக்கரில் ஐவுளி பூங்கா
மேற்கு மண்டலத்தில் சேலத்தில் ரூ.880 கோடியில் 119 ஏக்கரில் ஐவுளி பூங்கா ஒன்றிய அரசு உதவியுடன் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்
ஜவுளி பூங்காக்கள் - 2 லட்சம் வேலைவாய்ப்பு
புதிதாக அமையும் ஜவுளி பூங்காக்கள் மூலம் 2 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கம்
MSMEக்களை கணக்கெடுக்க ரூ.5 கோடி
குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களை கண்டறிந்து பதிவு செய்ய அரசு முயற்சி மேற்கொள்ளும்; 5 கோடியில் கணக்கெடுப்பு பணிகள்
பொருளாதார முதலீட்டு மாநாடு-ரூ.100 கோடி ஒதுக்கீடு
2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழக பொருளாதார உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழகத்தில் உலக பொருளாதாரதார முதலீட்டு மாநாடுகளுக்காக 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
219 ஒப்பந்தம்; 3,89,689 நபர்களுக்கு வேலை
2022ஆம் ஆண்டு முதல் இதுவரை 3,89,689 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் 219 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
EV உற்பத்தி-தமிழ்நாடு முதன்மை இடம்
பசுமை மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மை இடம்; கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனையான 46% மின் வாகனம் தமிழகத்தில் உற்பத்தி
மகளிர் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை
புதிதாக ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் 32 ஆயிரம் பெண்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தோல் அல்லாத காலணி உருவாக்கும் தொழிற்சாலை
மாநகராட்சிகளில் இலவச வை-ஃபை
தமிழ்நாட்டில் அனைத்து மாநகராட்சிகளில் பொதுவெளியில் இலவச வை-ஃபை சேவை வழங்க நடவடிக்கை
3 இடங்களில் மினி டைடல் பார்க்குகள்
செங்கல்பட்டு, திருநெல்வேலி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் தலா 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தொழில் நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்
மசூதிகள், தேவாலயங்கள் சீரமைப்பு
நாகூர் தர்காவை சீரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு; சேலம், மதுரையில் தேவாலயங்களை சீரமைக்க நிதி ரூ.10 கோடியாக உயர்வு
400 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்படும்
நடப்பு ஆண்டில் 574 கோயில்களில் திருப்பணி முடிந்து குடமுழுக்கு நடத்தப்பட்டது; வரும் ஆண்டில் 400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும்
3 கோயில்கள் ரூ.485 கோடியில் மேம்பாடு
பழனி, திருத்தணி முருகன் கோயில்கள், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகியவை ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும்
எளிய பத்திரப்பதிவுக்கு புதிய மென்பொருள்
நில நிர்வாகத்தில், நம்பகமான எளிய நில பதிவேற்று முறையை கொண்டு வர அரசு உறுதியாக உள்ளது; இதற்காக புதிய மென் பொருள் உருவாக்கப்படும்
13491 போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைது
போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க 13491 போதைப் பொருள் விற்பனையாளர் கைது; அவர்களின் வங்கி கணக்கு முடக்கம் .
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் - விளக்கம்
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வதந்திகளை பரப்பியோர் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை
அரசு பணியாளர் வீடுகட்ட முன்பணம் ரூ.50லட்சம்
அரசு பணியாளர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வழங்கப்படும் முன்பணம், ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக அதிகரிக்கப்படும்
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை
செப்.15ல் ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்
அண்ணா பிறந்தநாளில் மகளிர் ரூ.1000 உரிமைத்தொகை திட்டம்
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் குறித்து அறிவிப்பு
வரும் நிதியாண்டில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்.15 முதல் மகளிருக்கான ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் அமல்
Comments