தொழிலதிபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.36 லட்சம் பணம் உட்பட 80 சவரன் நகைகள் கொள்ளை
புதுச்சேரியில் தொழிலதிபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 36 லட்சம் ரூபாய் பணம் உட்பட 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ரெயின்போ நகரைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் இரவு தனது வீட்டருகே இருந்த போது, அங்கு காரில் வந்த மர்மநபர்கள் சிலர் முகவரி கேட்பது போல நெருங்கி கத்தியைக்காட்டி வீட்டினுள் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவரை தாக்கி வீட்டிலிருந்த 36 லட்சம் ரூபாய் பணத்தையும், 80 சவரன் நகைகளையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்.
Comments