தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்.. 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்!

0 3126

தமிழக சட்டசபையில் இன்று காலை 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அவை கூடியதும் மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments