“தேர்தல் நடைமுறைகளை தொடரலாம், முடிவை அறிவிக்கக்கூடாது” - பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், பொதுச்செயலாளர் தேர்தலுக்கான நடைமுறைகளை தொடரலாம் எனவும், வரும் 24-ம் தேதி வரை, தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவசர வழக்காக விசாரிக்கப்பட்ட நிலையில், ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அவசரமாக தேர்தலை நடத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
விதிகளுக்கு உட்பட்டே திருத்தம் கொண்டுவரப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டதாகவும், வழக்கு தொடர மனுதாரர்களுக்கு அடிப்படை உரிமை இல்லை என்றும் இபிஎஸ் தரப்பில் வாதிட்டனர்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி குமரேஷ் பாபு, ஏப்ரல் 11-ம் தேதி விசாரிக்க வேண்டிய பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட பிரதான வழக்கை, முன்கூட்டியே மார்ச் 22-ம் தேதி விசாரிப்பதாகவும், அன்றைய தினமே பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கையும் விசாரித்து, வரும் 24ம் தேதி தேர்தல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
Comments