சென்னையில் 5 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த 'ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்' நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு..!
சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 5 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த 'ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்' நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைந்தது.
இறுதி வார ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சி சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் இன்று காலை நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்று, இசைக்கு ஏற்றார் போல உற்சாகமாக ஆடி, பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சி நடைபெற்ற நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சி மன அழுத்தத்தை போக்குவதாகவும், வயதை மறந்து இளைஞர்கள் போல உற்சாகமாக இருந்தோம் எனவும் மக்கள் தெரிவித்தனர்.
இந்த வாரத்துடன் நிறைவடையும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை வாரந்தோறும் நடத்த வேண்டுமென சிலர் கோரிக்கை விடுத்தனர்.
Comments