இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு குழாய் மூலம் டீசல் விநியோகிக்கும் 'நட்புறவுக் குழாய்' தொடக்கம்..!
இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு குழாய் மூலம் டீசல் விநியோகிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனர்.
377 கோடி ரூபாய் செலவில் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இருந்து வங்கதேசத்தின் பர்பத்திப்பூர் வரை 125 கிலோ மீட்டர் தூரத்திற்கு டீசல் கொண்டு செல்ல குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 512 கிலோ மீட்டர் தூர ரயில் பாதை மூலம் வங்கதேசத்திற்கு டீசல் சப்ளை செய்யப்படும் நிலையில், தற்போது பைப் லைன் மூலம் ஆண்டிற்கு ஒரு மில்லியன் டன் அளவிற்கு டீசல் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, புதிய பைப்லைன் வங்கதேசத்தின் வளர்ச்சியை விரைவுப்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் கூறினார்.
Comments