ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம், ஆடைப்பூங்கா திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்த வேண்டும்.. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

0 1313

தமிழ்நாட்டில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப்பூங்கா திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்திடுமாறு பிரதமர் மோடி மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், பி.எம். மித்ரா பூங்காவினை அமைக்க விருதுநகரின் இ.குமாரலிங்கபுரம் கிராமத்தைத் தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார். பூங்கா அமையவுள்ள இடத்தில் 1,052 ஏக்கர் நிலம் சிப்காட் வசம் உள்ளதாகவும், திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்தினால், அதன் நோக்கங்களை வெற்றிகரமாக அடைய இயலும் என்றும்  ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments