அனைத்து பல்கலைக்கழகத்தில் பணி புரிபவர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் - அமைச்சர் பொன்முடி

0 1949

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பணிபுரிபவர்களுக்கு ஊதியம், மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் உள்ளிட்டவை ஒரே மாதிரியாக இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு அமைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டபிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர் பொன்முடி இதனை தெரிவித்தார்.

மேலும், பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களிடம் பழைய தேர்வு கட்டணமே வசூலிக்கப்படும் எனவும், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments