சர்வதேச சிறுதானிய ஆண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி..!
உணவு கலாச்சாரத்தில் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களின் பங்களிப்பை அதிகப்படுத்த இந்திய விஞ்ஞானிகளும், பண்ணை நிபுணர்களும் விரைந்து செயல்பட வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டினை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற உணவுதானிய கண்காட்சியை துவக்கி வைத்த மோடி, சிறப்பு தபால் தலை மற்றும் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.
கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் முன்மொழிவினைத் தொடர்ந்து, சிறுதானிய ஆண்டினை ஐநா அறிவித்துள்ளது பெருமைக்குரியது என்றும், இந்தியாவில் ஆண்டுக்கு 170 லட்சம் டன் சிறுதானியங்கள் விளைவிக்கப்படுவதாகவும் கூறினார்.
சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்த அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை திட்டத்தினை உணவு பதப்படுத்தும் துறையினர், விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் பிரதமர் கூறினார்.
Comments