ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!
ஆஸ்திரேலியாவின் மெனிண்டீ நகருக்கு அருகே உள்ள ஆற்றில் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழந்து தண்ணீரில் மிதந்துள்ளன.
சிட்னிக்கு மேற்கே ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெனிண்டீ நகரில் இருக்கும் டார்லிங் ஆற்றில் 10 லட்சம் மீன்கள் வரை இறந்துள்ளன.
மோசமான நீரோட்டம், மோசமான நீரின் தரம், திடீர் வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றால் மீன்கள் இறந்ததாகவும், ஆக்ஸிஜன் அளவுகளும் மீன்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதே பகுதியில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளிலும் அதிகளவில் மீன்கள் இறந்து கிடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Comments