வூஹான் உணவு சந்தையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட ரக்கூன் நாய்களிடம் இருந்து கொரோனா தொற்று பரவியதா.?
சீனாவின் வூஹான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட ரக்கூன் (raccoon) நாய்களிடம் இருந்து கொரோனா தொற்று பரவியதற்கான மரபணு சான்றுகள் உள்ளதாக, சர்வதேச நிபுணர்கள் குழு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அடுத்தசில மாதங்களில் உலகம் முழுதும் பரவியது. வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடி யாமல் விழி பிதுங்கியது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியதுகுறித்து நிபுணர்கள் குழு தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறது.
அதன்படி, வூஹான் நகரில் தொற்று பாதித்த ரக்கூன் நாய்களிடம் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்று சர்வதேச நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
Comments