''2024-ல் முழுப் பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்'' - உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

0 1588

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக முழுப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

இந்தியா டுடே நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து உள்ளதாகவும், அடுத்த பிரதமர் யார் என்பதை நாட்டு மக்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியில் இருந்து மோடியை வேறுபடுத்துவது குறித்து பேசிய அமித் ஷா, கனவு காணத் துணியாத 60 கோடி ஏழை இந்தியர்களுக்கு நம்பிக்கையை விதைத்து கனவுகாண வைத்திருப்பதாகவும், நாடு சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்றும் அமித்ஷா தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments