டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் விசாரணைக்காவல் 5 நாட்கள் நீட்டிப்பு!

0 1253

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் விசாரணைக்காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரிடம் மேலும் 5 நாட்கள் விசாரிக்க, ரோஸ் அவின்யூ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில், அமலாக்கத்துறை சிசோடியாவை கைது செய்து,7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இந்நிலையில், கூடுதலாக 7 நாட்கள் விசாரிக்க அனுமதிக்குமாறு, நீதிமன்றத்தில் இன்று அவரை ஆஜர்படுத்தி, அமலாக்கத்துறை கோரிய நிலையில், அதற்கு மணீஷ் சிசோடியா தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

தினமும் 5 முதல் 6 மணி நேரம் வரை மட்டுமே விசாரிக்க முடிந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இதனையடுத்து, விசாரணைக்காவல், 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments