விவசாய நிலத்தில் முகாமிட்டுள்ள நோய்வாய்ப்பட்ட மக்னா காட்டு யானைக்கு கும்கி யானை உதவியுடன் சிகிச்சை!

0 1308

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள விவசாய நிலத்தில் முகாமிட்டுள்ள நோய்வாய்பட்ட மக்னா காட்டு யானைக்கு, கும்கி யானை உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாட்களாக  ஆதிமாதையனூர் கிரமாத்தில் முகாமிட்டுள்ள மக்னா யானையை, காரமடை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், அந்த யானை நோய்வாய்பட்டு உடல் மெலிந்து, வனப்பகுதிக்குள் உணவு தேடி செல்ல முடியாத நிலையில் இருந்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து அவர்கள், டாப்சிலிப் பகுதியில் இருந்து சின்னதம்பி கும்கி யானையை வரவழைத்து கால்நடை மருத்துவ குழுவினரை கொண்டு மக்னா யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments