பிரான்ஸில் ஓய்வூதிய மசோதாவுக்கு எதிர்ப்பு.. போலீஸாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல் - கண்ணீர் புகைவீச்சு
பிரான்ஸில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 64ஆக உயர்த்தும் சட்ட மசோதாவை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் - போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
பிரான்சு நாடாளுமன்றத்தில் வாக்களிப்பு நடத்தாமல் ஓய்வு பெறும் வயதை 62லிருந்து 64 ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் முடிவெடித்ததை தொடர்ந்து, மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் களமிறங்கினர்.
பாரீஸில், கான்கார்ட் சதுக்கத்திற்கு அருகே குப்பை குவியல்களை தீவைத்து எரித்து ஆர்பாட்டகாரர்கள் அரசுக்கெதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, அவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கலை க்க முயன்றனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அந்த இடங்கள் போர்க்களமாகக் காட்சியளித்தன.
Comments