ரூ.70,500 கோடியில், இந்திய பாதுகாப்பு படைகளுக்கு புதிய தளவாடங்கள் வாங்க ஒப்புதல்..!
இந்திய பாதுகாப்பு படைகளுக்கு, சுமார் 70 ஆயிரத்து 500 கோடி மதிப்பில், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய ராணுவ தளவாடங்கள் வாங்க, அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை ஆயுத கொள்முதல் கவுன்சில் (DAC) கூட்டத்தில், இந்திய கடற்படைக்காக 60 மரைன் ஹெலிகாப்டர்கள், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதேபோல், ராணுவத்திற்கு 307 இலகுரக பீரங்கிகள் வாங்கவும், விமானப்படைக்கு 9 இலகுரக துருவ் ஹெலிகாப்டர் வாங்கவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது
Comments