"கச்சா எண்ணெய் குழாய், வரும் மே மாதம் 31ம் தேதிக்குள் அகற்றப்படும்.." - சி.பி.சி.எல்..!

0 1719

நாகை மாவட்டம் பட்டினச்சேரி கடற்கரையில் உடைப்பு ஏற்பட்ட கச்சா எண்ணெய் குழாய், வரும் மே மாதம் 31ம் தேதிக்குள் நிரந்தரமாக அகற்றப்படும் என மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கும் சி.பி.சி.எல் நிறுவனத்திற்கும் இடையே, நாகை மீன்வளத்துறை அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில், குழாய் நிரந்தரமாக அகற்றப்படும் என சி.பி.சி.எல் நிறுவனத்தினர் உறுதி அளித்ததை அடுத்து, இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கப்பட்டு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments