தருமபுரியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து - 2 பெண்கள் பலி... உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

0 1301

தருமபுரி மாவட்டம் நாகதாசம்பட்டியில், பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர்.

சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நாட்டு வகை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இன்று காலை 3 பேர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டதில், பட்டாசுகள் வெடித்து சிதறி, குடோன் இடிந்து தரைமட்டமானது.

இதில் பழனியம்மாள், முனியம்மாள் ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மற்றொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments