2030ம் ஆண்டிற்குள் விண்வெளிச் சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ திட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற 2030ம் ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே, வல்லரசு நாடுகளில் பிரபலமாக இருக்கும் விண்வெளி சுற்றுலா திட்டத்தை இஸ்ரோவும் செயல்படுத்தவுள்ளது.
இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், விண்வெளி சுற்றுப்பாதையில் 15 நிமிடங்கள் வரை சுற்றிவர, பயணி ஒருவருக்கு ஆறு கோடி ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments