சென்னையில் வாகன ஓட்டிகள் ஸ்பீடு லிமிட்டை தெரிந்து கொள்ள 6 இடங்களில் டிஜிட்டல் பலகை
சென்னையில் 170 போக்குவரத்து சந்திப்புகள், ரிமோட் கண்ட்ரோல் முறையில் இயங்கும் சிக்னல்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதியை சென்னை அண்ணா சாலையில் தொடங்கி வைத்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இதன் மூலம் போக்குவரத்து சந்திப்புகளில் பணியில் உள்ள காவலர் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து கொண்டே சிக்னலையும் மாற்ற முடியும்.
ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்தி வரும் போது உடனடியாக சிக்னலை மாற்றி வழி ஏற்படுத்தி தர முடியும் என அவர் தெரிவித்தார்.
இதே போல, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்ளில் செல்ல வேண்டிய வேக வரம்பை தெரிந்து கொள்ள 6 இடங்களில்
டிஜிட்டல் பதாகைகளும், 45 இடங்களில் டிஜிட்டல் செய்தி பலகைகளும், எல்.ஈ.டியும் பொருத்தப்பட்ட போக்குவரத்து நிழற்குடைகளையும் ஆணையர் தொடங்கி வைத்தார்.
Comments