60 அடி ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு.. ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்..

0 1901
மத்தியபிரதேச மாநிலம் விதிஷாவில், 60 அடி ஆழ ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன், 24 மணி நேரப்போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டான்.

மத்தியபிரதேச மாநிலம் விதிஷாவில், 60 அடி ஆழ ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன், 24 மணி நேரப்போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டான்.

நேற்று காலை சுமார் 11 மணியளவில், விவசாய நிலத்தில் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளைக்கிணற்றில், சுமார் 43 அடி ஆழத்தில் சிக்கிய லோகேஷை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு, பொக்லைன் இயந்திர உதவியுடன் கிணற்றின் அருகில் பள்ளம் தோண்டி அவனை மீட்க முயற்சித்தனர்.

இருப்பினும் சிறுவன் உயிரிழந்த நிலையில், லோகேஷின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த  முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், 4 லட்சம் நிதி உதவி அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments