ஆஸ்கர் வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற தம்பதி முதலமைச்சருடன் சந்திப்பு

0 1983

ஆஸ்கர் விருது பெற்ற "தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ்" என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் - பெல்லி தம்பதியை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொம்மன் - பெல்லி தம்பதி, தாயை பிரிந்த குட்டி யானைகளை தங்களது குடும்பத்தில் ஒருவர் போல நினைத்து வளர்த்ததாகவும், குறும்படம் ஆஸ்கர் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

ரகு குட்டி யானையை பிரிந்தது வருத்தம் அளித்தாலும் புதிதாக வரும் குட்டி யானைகளை வளர்க்கும் பணியை தொடர்ந்து செய்வோம் என்றும் அவர்கள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments