ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானை முகாம் மேம்பாட்டிற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர்

0 1243

தெப்பக்காடு, கோழிகமுத்தி யானைகள் முகாமில் பணிபுரியும் 91 யானை பராமரிப்பாளர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 1 லட்சம் ரூபாய் நல்கை வழங்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

91 பேரும் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த, அவர்கள் பண்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை 5 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தவும், கோவை மாவட்டம் சாடிவயல் பகுதியில், யானைகள் பராமரிக்கத் தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய யானைகள் முகாம்
8 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments