சீனாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் முதல் போர்ட்டபிள் தாக்குதல் ட்ரோனை அறிமுகம் செய்துள்ளது தைவான்..!
சீனாவின் ராணுவ அழுத்தம் அதிகரித்துவரும் நிலையில், தைவான் தனது முதல் போர்ட்டபிள் தாக்குதல் ட்ரோனை அறிமுகம் செய்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வீரர்கள் பயன்படுத்திவரும் அமெரிக்க ஆளில்லா விமானம் போன்று, தைவானில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த ட்ரோன் மூலம் எதிரிகளின் இலக்கை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த முடியும் என்று கூறப்படுகிறது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய இந்த ட்ரோன், ஒரு பையில் எடுத்துச் செல்லும் அளவுக்கு சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 நிமிடங்கள் வரை வானில் பறக்க முடியும் என்று கூறப்படுகிறது.
Comments