வீடியோ காலில் 'பாவம்'.. நேரில் வந்தால் 'மன்னிப்பு'.. இளம் பாதிரியார் 'ஓட்டம்'..! ஆதாரங்களுடன் பெண் பரபரப்பு புகார்..!

0 11056

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிக்கு பாவமன்னிப்பு கொடுப்பதாக அத்துமீறிய இளம் பாதிரியாரை தட்டிக்கேட்ட சட்டகல்லூரி மாணவர் மீது பொய்யான புகார் அளித்து போலீசில் சிக்க வைத்திருப்பதாக மாணவனின் தாய் ஆதாரங்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்..

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாத்திமா நகரை சேர்ந்த இளம் பாதிரியார் பெனடிக் ஆன்டோ.

அழகியமண்டபம் அருகே பிலாங்காலை தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த ஆண்டோ, சட்டக் கல்லூரி மாணவரான ஆஸ்டின் ஜியோ தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக கொல்லங்கோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த மாணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஆஸ்டின் ஜினோவின் தாயார் மினி அஜிதா நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து பாதிரியாருக்கு எதிராக மனு அளித்தார். பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவியிடம் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் நடந்து கொண்டதாகவும் அதை தட்டிக் கேட்டதால் தனது மகன் ஆஸ்டின் ஜினோ மீது பொய் புகார் அளித்து போலீசாரை வைத்து கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாக குற்றஞ்சாட்டினார்

பாதிரியார் ஆண்டோ பல பெண்களோடு தவறானதொடர்பு வைத்துக் கொண்டதாகவும் பல நேரங்களில் ஏராளமான பெண்களிடம் வீடியோகாலில் ஆபாச சாட்டிங் செய்து அதனை தனது லேப்டாப்பில் பதிந்து வைத்து பெண்களை மிரட்டி இச்சைக்கு இணங்க வைத்ததாகவும் பாதிரியார் மீது குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக உரிய வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை காவல்துறைக்கு சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்த மினி அஜிதா, தனது மகனுக்கு நியாயம் வழங்க வேண்டும் என காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்ததார்.

அதே போல பாதிரியாரின் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், குலசேகரம் அருகே உள்ள தேவாலயத்தில் பெனடிக் ஆன்டோ பாதிரியாராக பணிபுரிந்த போது அந்த தேவாலயத்திற்கு தான் வாரந்தோறும் சென்று வந்ததாகவும், அப்போது ஏற்பட்ட அறிமுகத்தை பயன்படுத்தி தன்னிடம் செல்போனில் பேசத்தொடங்கிய பாதிரியார் ஒரு கட்டத்தில் ஆபாசமாக பேசுவது, ஆபாச படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்புவது தனியாக அழைப்பது, இரவு நேரங்களில் வீடியோ காலில் தொடர்பு கொள்வது என தொடர் தொல்லையாக மாறியதாகவும் தான் அதில் இருந்து தப்பியதாகவும் அந்த மாணவி வேதனை தெரிவித்தார்

இந்தக் குற்றச்சாட்டு குறித்து பாதிரியார் பெனடிக் ஆண்டோவிடம் விளக்கம் கேட்க முயன்ற போது, அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில் பாதிரியார் ஆண்டோவின் வீடியோக்கள் பாவமன்னிப்பு பரிதாபங்கள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments