நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரம்
நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டப் பணிகள் குறித்த நேரத்தில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூரிச் சர்வதேச விமான நிலை ய ஏஜியின் துணை நிறுவனமான, யமுனா சர்வதேச தனியார் விமான நிலையம் டெல்லி அருகே உத்தரபிரதேச மாநில எல்லையில் ஜேவரில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் தை மேம்படுத்துகிறது.
இதற்காக தளத்தில் 2 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், 400க்கும் மேற்பட்ட இயந்திரங்களும் நிறு வப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நான்கு கட்டங்களாக கட்டி முடிக்கப்பட்டவுள்ள இந்த விமான நிலையம், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையமாக 5,000 சதுர ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்படும் என்றும், முதற்கட்டமாக 1,300 ஹெக்டேர் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டு, அடுத்த ஆண்டு இறுதிக்குள் தயாராகும் என்றும் திட்ட அதிகாரி ஒருவர் கூறினார்.
Comments