காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு பழுது பார்க்கும் பணிக்காக வந்த அமெரிக்க தளவாட கப்பல்
திருவள்ளூர் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு பழுது பார்க்கும் பணிக்காக அமெரிக்க தளவாட கப்பல் வந்துள்ளதால், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியா - அமெரிக்கா நட்புறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் முறையாக கடந்த ஆண்டு அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யூ.எஸ்.என்.எஸ். சார்லஸ் டிரியூ என்ற போர்க்கப்பல் பழுது மற்றும் பராமரிப்பு சேவை பணிக்காக வந்தது. இந்நிலையில், மேத்யூ பெர்ரி என்ற அமெரிக்க கப்பல், பழுது பார்ப்பதற்காக எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்திற்கு வந்துள்ளது.
இதனால், துறைமுகத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, ஊழியர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே கப்பல் கட்டும் தளத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
Comments