ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சீர் செய்ய வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
பால் கொள்முதலை அதிகரித்து ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஆவின் பாலையே நம்பியுள்ளதாகவும், தற்போது 20 முதல் 25 லட்சம் லிட்டர் வரை மட்டுமே பால் கொள்முதல் செய்யப்பட்டு, விற்பதால் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், முக்கிய பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் குறைக்கப்பட்டதால், அவர்கள் தனியார் நிறுவனங்களுக்கு பாலை விற்பதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
Comments