நண்பனின் உடலை, சுரங்கப்பாதையில் வைத்து விட்டுச் சென்ற சிறுவர்கள்.. டெல்லியில் நடந்தது என்ன?

0 3478

டெல்லியில், விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக, சுரங்க பாதையில் விட்டுச் சென்ற மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் அளித்த தகவலின்படி, நான்கு சிறுவர்கள் பயணித்த ஆட்டோ விபத்தில் சிக்கி கவிழ்ந்ததில், அதில் பயணித்த சிறுவன் ஒருவன் காயமடைந்து, பின்னர் உயிரிழந்துள்ளான்.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து சிறுவனின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக, டெல்லி விவேக் விகார் பகுதியில் உள்ள சுரங்க பாதையில் சிறுவர்கள் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments