சென்னை நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதானவர்களிடமிருந்து இதுவரையில் 4.5 கிலோ தங்கம் பறிமுதல்..!

0 1631

சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதானவர்களிடமிருந்து இதுவரையில் நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஎல் நகைக்கடையில் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி, 9 கிலோ தங்க நகைகள், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கங்காதரன், ஸ்டீபன் ஆகியோர் இரண்டரை கிலோ தங்க நகைகளுடன் பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்களிடம், சென்னை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, கொள்ளையில் தொடர்புடைய கஜேந்திரன், திவாகர் ஆகியோரை கைது செய்து விசாரித்ததில், கொள்ளையடித்த நகைகளில் பெரும்பாலானவற்றை அவர்கள் உருக்கியது தெரிய வந்தது.

கொள்ளையர்கள் அளித்த தகவலின் பேரில் பெங்களூரிலிருந்து சுமார் இரண்டு கிலோ தங்கம் மீட்கப்பட்டதாக தெரிவித்த போலீசார், கொள்ளையில் தொடர்புடைய மேலும் 2 பேரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments